Friday, March 29, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் சிறுமியைக் கடத்த முயன்றதாகத் தெரிவித்து நையப்புடைக்கப்பட்ட நபருக்கு மனநலம் பாதிப்பு!

யாழில் சிறுமியைக் கடத்த முயன்றதாகத் தெரிவித்து நையப்புடைக்கப்பட்ட நபருக்கு மனநலம் பாதிப்பு!

இரண்டாம் இணைப்பு:

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் மனநிலை பாதிப்புக்கு உள்ளானர் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை, சிறுவர்களை கடத்தும் நோக்குடன், அப்பகுதியில் நடமாடினார் என ஒரு நபரை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தினர்.

பொலிஸாரிடம் மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் , அந்நபர் மனநிலை பாதிக்கப்படவர் என தெரியவந்துள்ளது.

அதேவேளை குறித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் அவரது குடும்பத்தினரால் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மக்களால் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

முதலாம் இணைப்பு:

யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்த முயற்சித்தார் எனத் தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுத் தாக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை யாழ்ப்பாணப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்மானியாக் கல்லூரி வீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில் பாடசாலைக்குச் சென்ற மாணவி ஒருவரை, ஒருவர் நீண்ட நேரமாக அவதானித்துக் கொண்டிருந்ததை அவதானித்த அப் பகுதி மக்கள் குறித்த நபரைப் பிடித்து விசாரித்தபோது அவரது பதில் சந்தேகத்துக்கிடமாக இருந்ததால் அவரை மடக்கிப் பிடித்து தாக்கிப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் சிறுவர்களை கடத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை தோன்றியுள்ளது.

குறித்த அசம்பாவித சம்பவங்கள் காரணமாக, மாணவர்கள் தனித்து செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும், ஏனைய மாணவர்களுடன் சேர்ந்து செல்லுமாறும் பல பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், ஆரம்ப பிரிவு மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments