Friday, April 19, 2024
Homeஇலங்கை செய்திகள்முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன் வளர்ப்பு திட்டம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன் வளர்ப்பு திட்டம்!!

குழந்தைகளின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்தும் புதிய மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட

ஒட்டறுத்தகுளம், வண்டிக்காட்டுக்குளம், பாலைப்பாணி மற்றும் கிடாப்பிடித்தகுளம் முதலிய நான்கு குளங்களில் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம் நேற்றைய தினம் (27.01.2023) மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி என்.ரஞ்சனா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக, விவசாய அமைப்புகளில் இருந்து 10000 மீன் விரலி குஞ்சுகளும், ரஹமாவிலிருந்து 50000 மீன் குஞ்சுகளும் குளங்களில் விடப்பட்டன.

தேவையான 4 கிராமங்களில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் 120 குடும்பங்களின் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் நிலையான வருமானத்தை உருவாக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் கிராம மக்களின் சத்தான உணவை உறுதி செய்வதே திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இந்த நிகழ்வில், இத்திட்டத்தின் செயலாளர் நாயகமும், ரஹமா நிறுவனத்தின் பொறியியலாளருமான எம். எப். மரிக்கார் மற்றும் உத்தியோகத்தர்கள்,

விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments