Saturday, April 20, 2024
Homeஉலக செய்திகள்முதலை போல உடை அணிந்து வந்த நபர்…முதலைக்கே ஷாக் கொடுத்த சம்பவம்!

முதலை போல உடை அணிந்து வந்த நபர்…முதலைக்கே ஷாக் கொடுத்த சம்பவம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் முதலை போல உடை அணிந்து முதலையிடமே ‘ப்ராங்க்’ (prank) செய்த நபர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

ஒரு நீர்நிலையின் கரையோரத்தில் ஒதுங்கியிருந்த ஒரு ராட்சத முதலையிடம் அவர் செய்த சேட்டைகள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வனவிலங்குகளை துன்புறுத்தியதாக கூறி அந்த நபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சமீபகாலமாக ‘ப்ராங்க்’ என்ற பெயரில் பல யூடியூபர்கள் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை. தங்கள் சேனலுக்கு நிறைய வியூஸ் (views) வர வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடம் அவர்கள் செய்யும் சீண்டல்கள் எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது. இதனால் பல நாடுகளில் ப்ராங்க் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, ‘மக்களிடம்தானே ப்ராங்க் செய்யக் கூடாது.. விலங்குகளிடம் செய்வோம்ல..’ என்ற ரீதியில் ஒருசில யூடியூபர்கள் இறங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஆப்பிரிக்காவில் சிங்கத்தை போன்ற உடை அணிந்து சிங்கங்களிடம் ப்ராங்க் செய்த நபர் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் நூலிழையில் தப்பிய சம்பவம் அரங்கேறியது. அந்த வகையில், முதலையிடம் ஒருவர் செய்த ‘ப்ராங்க்’ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் ப்ராங்க் வீடியோக்கள் செய்வதில் கைத்தேர்ந்தவர் ஆவார். இதனிடையே, இவர் சமீபகாலமாக சாலைகளில் சுற்றித்திரியும் நாய், பூனை, மாடுகளிடம் ஏதேனும் சேட்டைகள் செய்து அதை வீடியோவாக போட்டு வருகிறார். உதாரணமாக, சிங்கத்தை போன்ற முகமூடி அணிந்து நாய்க்கு அருகே இவர் படுத்துக் கிடப்பார். தற்செயலாக திரும்பிப் பார்க்கும் நாய்கள், நிஜ சிங்கம் என நினைத்து அடித்து பிடித்து ஓட்டம் எடுக்கும். இதுபோன்ற வீடியோக்களை அவர் தனது சேனலில் பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்களுக்கும் லைக்ஸ் அள்ளுகின்றன. இந்நிலையில்தான், ஆபத்தான விலங்கிடம் ‘ப்ராங்க்’ செய்ய வேண்டும் என்ற யோசனை அவருக்கு வந்துள்ளது.அதன்படி, ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் அந்த நபர் தனது ப்ராங்க்கை கடந்த வாரம் அரங்கேற்றியுள்ளார். டார்வின் நகரத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் முதலைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. நன்னீர் முதலைகளான இவை மிகவும் ஆபத்தானவை ஆகும். கங்காரு, மாடு போன்ற கால்நடைகளும் சில நேரங்களில் மனிதர்களும் கூட இந்த முதலைகளின் கோரைப் பற்களில் சிக்கி இரையாகி இருக்கிறார்கள். இந்நிலையில், அங்குள்ள ஒரு கால்வாயின் கரையோத்தில் 7 அடி நீள முதலை ஒன்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது.இதை பார்த்த அந்த யூடியூபர், தான் கொண்டு வந்திருந்த முதலை தோல் போன்ற உடையை அணிந்து, அந்த முதலையை நோக்கி தவழ்ந்து சென்றார். இதை பார்த்த அந்த முதலையும், இதுவும் ஒரு முதலை என நம்பிவிட்டது. பின்னர், அந்த முதலைக்கு பின்னால் சென்ற யூடியூபர், அந்த முதலையின் பின்னங்கால்களை பிடித்து இழுப்பதும், முதலைக்கு கிச்சுகிச்சு மூட்டிவிடுவதுமாக சேட்டை செய்ய ஆரம்பித்தார். முதலையும் அவர் செய்யும் செயல்களை சகித்துக்கொண்டு அமைதியாக இருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை கடுமையாக வசைபாடி திரும்பி வருமாறு கத்தினர். இதனால் அவர் சட்டென எழுந்து அங்கிருந்து ஓடி வந்து தப்பினார். நல்ல வேளையாக, அந்த முதலை அவர் ஓடுவதை பார்க்கவில்லை. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments