Friday, April 19, 2024
Homeவானிலை செய்திமீண்டும் பீதியை கிளப்பும் மாண்டஸ் புயல் .சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா ?

மீண்டும் பீதியை கிளப்பும் மாண்டஸ் புயல் .சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா ?

மழையின்போது தண்ணீர் அதிகம் தேங்கிய அனைத்து இடங்களிலும் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், வலுவற்ற நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புயலைத் தொடர்ந்து, கனமழையை எதிர்கொள்ள தயாராக அடுத்த மூன்று நாட்களுக்கு இருக்குமாறும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு குறித்து மாநகராட்சியின் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், 8 முதல் 10ம் தேதி வரை 24 மணி நேரமும் மாநகராட்சி களப்பணியாளர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த மழையின்போது தண்ணீர் அதிகம் தேங்கிய அனைத்து இடங்களிலும் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், வலுவற்ற நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்றும், அனைத்து வார்டுகளிலும் மருத்துவ குழுக்கள் மற்றும் மருந்துகளை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments