Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்மீண்டும் களம் இறங்கும் டாடா நானோ எலக்ட்ரிக் காராக அறிமுக படுத்த போவதாக தகவல் .

மீண்டும் களம் இறங்கும் டாடா நானோ எலக்ட்ரிக் காராக அறிமுக படுத்த போவதாக தகவல் .

இந்த வரிசையில் டியாகோ எலெக்ட்ரிக் காரை (Tiago EV) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் டெலிவரி பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளன. இதற்கு அடுத்தபடியாக பன்ச் எலெக்ட்ரிக் கார் (Punch EV), அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் (Altroz EV) என பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

இதுதவிர (Curvv EV) மற்றும் (Avinya EV) எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே காட்சிப்படுத்துள்ளது. இந்த கான்செப்ட் மாடல்களும், இறுதி தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளன. இந்த சூழலில், மக்களின் கார் (People’s Car) என பெயர் எடுத்த நானோ (Tata Nano) காருக்கும் மீண்டும் உயிர் கொடுப்பதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டாடா நானோ கார், கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் குறைவான விலை என்பதால், டாடா நானோ கார் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இது ரத்தன் டாடாவின் (Ratan Tata) கனவு கார் ஆகும். இந்திய மக்கள் அனைவரிடமும் சொந்தமாக ஒரு கார் இருக்க வேண்டும் என்ற உயரிய லட்சத்தியத்துடன், டாடா நானோ காரை அவர் பார்த்து பார்த்து உருவாக்கினார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக டாடா நானோ கார் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக டாடா நானோ காரின் உற்பத்தி, கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் நிறுத்தி கொள்ளப்பட்டது. இந்த சூழலில்தான், டாடா நானோ கார் புதிய அவதாரம் எடுக்கவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நானோ காரை எலெக்ட்ரிக் அவதாரத்தில் (Nano EV) மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

எலெக்ட்ரிக் பவர்ட்ரெயினுக்கு சப்போர்ட் செய்வதற்காக நானோ காரின் தற்போதைய பிளாட்பார்ம்மை மேம்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் காரின் சஸ்பென்ஸன் மற்றும் டயர்களில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய சந்தையில் டாடா நானோ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது இறுதி வடிவம் பெற்றால், மேலும் சில விஷயங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments