Friday, April 19, 2024
Homeஇலங்கை செய்திகள்மிளகாய் தூளில் கலப்படம் - இலங்கையர்களே அவதானம்..!

மிளகாய் தூளில் கலப்படம் – இலங்கையர்களே அவதானம்..!

சந்தைக்கு மிளகாய்த்தூள் மற்றும் மிளகாய்ப்பொடிகளை விநியோகிக்கும் ஆலையொன்றை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடத்திய சோதனையில், மிளகாய்ப் பொடி மற்றும் மிளகாய்ப்பொடிகளில் 50 வீதமான உப்பு, கோதுமை மாவு மற்றும் கலரிங் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இரசாயன பரிசோதகருக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள் மூலம் பெறப்பட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

அம்பலங்கொட பொது சுகாதார பரிசோதகர் ஹன்சிகா நதீஷ் கூறுகையில், மக்கள் உட்கொள்ளும் உணவில் இவ்வாறான பொருட்களை சேர்ப்பதன் மூலம் மக்கள் நோய்களுக்கு ஆளாகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததன் பின்னர், மனித பாவனைக்குத் தகுதியற்ற 368 கிலோகிராம் மிளகாய்ப் பொடியை அழிக்குமாறு பலப்பிட்டி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments