Tuesday, April 23, 2024
Homeஇலங்கை செய்திகள்மாவீரர் நாள் - உணர்வுபூர்வ அஞ்சலிக்கு தயாராகும் வடகிழக்கு தமிழர்கள் !

மாவீரர் நாள் – உணர்வுபூர்வ அஞ்சலிக்கு தயாராகும் வடகிழக்கு தமிழர்கள் !

மாவீரர் நாள் நினைவேந்தல் வடகிழக்கு மாகாணத்திலுள்ள சகல மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இன்று உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.

அதற்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அனைத்து துயிலும் இல்லங்களிலும் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இன்று 27 ஆம் திகதி மாலை 06.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள் வீடுகள் பொது இடங்களில் சம நேரத்தில் சுடர் ஏற்றபட உள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த

அனைவரையும் அணிதிரண்டு வருமாறும் அந்தந்த துயிலும் இல்லங்களின் பணிக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தாயக விடுதலைக்காக தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை நினைவுகூர்ந்து வருடம்தோறும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்தவருடமும் மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இடம்பெற்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments