Thursday, March 28, 2024
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்பேஸ்புக், ரிக்ரொக் ஊடாக ஒரு நாளைக்கு 30 ஆயிரத்துக்கு மேல் உழைக்கும் கிளிநொச்சி குடும்பஸ்தர்!!

பேஸ்புக், ரிக்ரொக் ஊடாக ஒரு நாளைக்கு 30 ஆயிரத்துக்கு மேல் உழைக்கும் கிளிநொச்சி குடும்பஸ்தர்!!

புலம்பெயர் உறவுகளுக்கு முக்கிய வேண்டுகோள்….

வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள வறுமைப்பட்டவர்களுக்கு உதவி செய்ய உங்களுக்கு நிச்சயம் மனக்கருனை இருக்கும். அதற்காக பேஸ்புக் மற்றும் சமூகவலைத்தளங்களில் காணொளிகளாகவும் பதிவுகளாகவும் வெளியிடுபவர்களை நம்பி ஒருபோதும் உதவி செய்யாதீர்கள். குறித்த நபர்கள் முகவர்களாக இருந்து இலட்சக்கணக்கில் பணத்தை சுரண்டுகின்றார்கள். ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் உங்கள் கருணையை அளந்து வெளியிடுங்கள். சமூகவலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிடுபவர்களின் வீடியோக்களைப் பார்த்து ஒருவருக்கு உதவி செய்ய முற்படுபவர்களாக நீங்கள் இருந்தால் நிச்சயம் அவரிடமிருந்து அந்தப் பகுதி கிராமசேவையாளர் மற்றும் அதற்குப் பொறுப்பான பிரதேசசெயலக உத்தியோகத்தர்களிடமிருந்து அந்த ஏழையைப் பற்றிய தகவலை எடுங்கள். அந்த ஏழைக்கு என்ன பொருத்தமான உதவியை செய்யலாம். அவருக்கு எவ்வாறான வாழ்வாதரத்தை கொடுக்கலாம் என அவர்கள் மூலமாக அறிந்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு வீடியோவைப் பார்த்து ஏராளமானவர்கள் அவர்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். உடனடியாக குறித்த வீடியோவைப் வெளியிட்டவர் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து சரிக்கு சரி பாதி தானும் பெற்று பல லட்சங்களை ஒரே நபரே சுருட்டி செல்லும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறானவர்கள் எந்த உதவி செய்தாலும் இப்படியே இருப்பார்கள். காரணம் இவ்வாறு இருந்தால்தான் உதவி வரும் என அவர்களுக்கு தெரியும். ஆகவே சிந்தித்து செயற்படுங்கள்…

தமது பெயர் புகழுக்காக புலம்பெயர்ந்து சென்ற சிலர் டி.கே கார்த்திக் போன்றவர்கள் மூலம் இவ்வாறான சில உதவிகளை செய்து தம்மை அடையாளப்படுத்த அனுப்புவது வேறு விடயம். அதே போல் பெண் பலவீனமுள்ள சில புலம்பெயர் தமிழர்களும் இவர்கள் மூலம் தமது இச்சையை தீர்க்க முனைவது வேறு விடயம். ஆனால் கருணை உள்ளம் உள்ளவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை செய்யும் போது பாத்திரம் அறிந்து பிச்சை இடுங்கள். நீங்கள் கொடுக்கும் உதவிகளை, அவருக்கு வேறு உதவிகள் கிடைக்கவில்லையா? ஏன் அவருக்கு கிடைக்கவில்லை… ஏன் வறுமையில் இருக்கின்றார்கள்? என அந்தப்பகுதி கிராம சேவகர், பிரதேசசெயலகம் போன்றவற்றில் அறிந்தபின் கொடுங்கள்.

இதையும் அவதானியுங்கள்.

தனது பேஸ்புக் பக்கம் மற்றும் ரிக்ரொக் ஊடாக நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கு மேல் உழைத்து வருகின்றார் கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தர் டீ.கே கார்த்திக். இவர் எந்த ஒரு வேலையும் செய்யாதவர். ஆனால் கிளிநொச்சியில் உள்ள பிரபல வர்த்தகர்களிடையே நடைபெறும் சீட்டுப்பிடித்தல் செயற்பாட்டில் இவர் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபா படி வருசத்திற்கு 36 லட்சம் பெறுமதியான இரு சீட்டுக்களை தனது உறவுகளின் பெயரில் செய்து வருகின்றார் என கிளிநொச்சியில் உள்ள முக்கிய வர்த்தகர்கள் சிலர் தெரிவித்தனர்.

ஏற்கனவே குறும்பட நடிகர்,டான்ஸ் மாஸ்டர் என சமூகத்திற்கு ஏராளமான தொண்டுகள் செய்து வந்ததால் இவருக்கு வெளிநாடு உட்பட்ட நாடுகளில் ஏராளமான அபிமானிகள் இருந்து வருகின்றார்கள்.

கிளிநொச்சியில் உள்ள பல பெண்களை அழகுக்கலை ஆசையூட்டி அவர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று தவறான வழியில் செல்ல செய்தவர் இவர். அதே போல் நகைக்கடை ஒன்றின் மூலம் கிளிநொச்சியில் அழகுராணிப் போட்டி என்று ஒன்றை நடாத்துவதில் முக்கிய பங்கு வகித்து அப்பாவிப் பெண்கள் பலரின் வாழ்க்கையை நாசம் செய்தவர் இவர். சில இளம் பெண்களுக்கு சினிமை ஆசையூட்டி அவர்களை குறும்பட நடிகயாக்குவதாக தெரிவித்து கிளிநொச்சி மற்றும் வவுனியா யுவதிகள் பலரை நாசப்படுத்தியவர்.

இந் நிலையில் இவர் தற்போது கையில் எடுத்திருப்பது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக புலம்பெயர் நாடுகளில் உள்ள அப்பாவிகள் மற்றும் மன உருக்கம் உள்ளவர்களை கவர்ந்து வருகின்றார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் உள்ளவர்களில் பார்வைக்கு வறுமைக் கோட்டில் இருப்பவர்கள் என்று தெரிபவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என தனது முகப்புத்தகம் மற்றும் ரிக்ரொக் வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றார். தனது வசீகரக் குரலில் புலம்பெயர் தமிழர்களை மிகவும் நுட்பமாக நம்பச் செய்து அவர்களிடமிருந்து பணம் பெற்று வருகின்றார்.

அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு தமிழன் தனது காணிக்குள் அடாத்தாக இருந்த கஞ்சா கடத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக தனது பேஸ்புக் மற்றும் ரிக்ரொக்கில் பதிவிட்டு பெரும் வரவேற்பைப் பெற்றவர். அவர் வெளியிட்ட வீடியோவை நாம் அப்படியே தருகின்றோம். வாசகர்கள் வீடியோக்களைப் பார்க்கும் போது முதலில் வரும் தகவல்களை பார்த்து விட்டு கடைசிவரை வீடியோவைப் பார்ப்பதை பலரும் தவிர்ப்பார்கள். அந்த மனநிலையை அறிந்த கார்த்திக் குறித்த கஞ்சா குடும்பத்தின் செயற்பாட்டுகளை வீடியோக்கு முதலில் போட்டுவிட்டு பின்னர் வெளிநாட்டு தமிழனின் உறவுகள் கூறுவதை கடைசியில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே குறித்த வெளிநாட்டு நபர் அந்தக் குடும்பத்திற்கு அநியாயம் செய்வதாக கூறி வெளியிட்ட வீடியோவுக்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்து அந்த வெளிநாட்டு நபரின் கருத்தையும் வெளியிட வேண்டும் என கூறிய பின்னரே எதுவும் செய்ய முடியாத நிலையில் அந்த வீடியோவையும் இணைத்திருந்தார்.

இந்த வீடியோவில் 11 நிமிடம் 43 செக்கன்களின் பிறகு உள்ள தகவலை பார்த்த பின் முதலிலிருந்து வீடீயோவைப் பாருங்கள் புரியும்.

கார்த்திக் கஞ்சாவுக்கு அடிமையாகியவர் என அவரது நெருங்கிய நண்பர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம். இவ்வாறான நிலையிலேயே கஞ்சா விற்பனை செய்யும் அந்த குடும்பத்தின் 2 இளைஞர்களுக்கும் தாய்க்கும் ஆதரவாக களத்தில் இறங்கினார் கார்த்திக். அந்தக் குடும்பத்தின் தாய் நடத்தை சரியில்லாததால் கணவன் விட்டு பிரிந்திருந்ததுடன் தனது பிள்ளைகளையும் கஞ்சா விற்க ஊக்கப்படுத்தினார். இவர்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடக்கின்றன. கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் நிலையங்களில் இந்த குடும்பம் கஞ்சா விற்ற ஆதாரங்களுடன் பல வழக்குகள் இருக்கின்றன. நம்ப மறுப்பவர்கள் அங்கு சென்று பார்வையிடலாம்.

வெளிநாட்டில் இருக்கும் நம்மவர்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு உழைக்கின்றார்கள், எவ்வளவு நெருக்கடிக்குள் வெளிநாடு சென்றார்கள், இலங்கையில் இருக்கும் தமது உறவுகள், தமது சொத்துக்களில் எவ்வளவு பிரியமாக இருக்கின்றார்கள் என்பதை எல்லாம் துச்சமாக நினைத்து வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இங்கு காணி ஏன் என கேள்வியை தொடுத்துள்ளார். தனது சொந்தக் காணியில் அடாத்தாக ஒரு கேவலம் கெட்ட குடும்பம் இருப்பதை யாராவது அனுமதிப்பார்களா? அதற்கிடையில் கார்த்திக் அரச அதிகாரிகளையும் வாசகர்களைக் கவரும் விதமாக சிறப்பாக குற்றம் சாட்டுகின்றார்.காணி உரிமையாளனுக்கு காணியை கொடுக்காமல் கண்ட காவாலிகளுக்கும் அரச அதிகாரிகள் காணி கொடுப்பார்களா?

இனி இவர் வெளியிட்ட ஏனைய உதவி கோரும் வீடியோக்களில் உள்ளவர்கள் தொடர்பாக உதவி செய்யவிரும்புபவர்கள் நேரடியாக கார்த்திக்குக்கு உதவித் தொகையை அனுப்ப வேண்டாம். அந்த பகுதி கிராம சேவையாளர் மற்றும் பிரதேசசெயலகத்தை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்ற பின்னரே உதவிகளை செய்யுங்கள்…. இவன் வெளியிட்ட இன்னொரு வீடியோ தொடர்பாக சில தகவல்கள் இதோ

இந்தக் குடும்பமும் மிக மோசமான நடத்தை உடைய குடும்பம்.இந்த வீடியோவில் காட்டப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே ஏராளமான உதவிகள் புலம்பெயர் தமிழர்களால் செய்யபட்டுள்ளதுடன் அரச அதிகாரிகளும் இந்தக் குடும்பத்திற்கு உதவிகள் செய்துள்ளார்கள். இந்தக் குடும்பத்தின் குடும்பத்தலைவர் சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றம் மற்றும் கொலைக் குற்றம் போன்றவற்றுக்காக பல வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். இவ்வாறு வெளியிடும் வீடியோவை பார்த்து புலம்பெயர் தமிழர்கள் இவரைத் தொடர்பு கொள்வார்கள். இவர் அவர்களிடம் காசைப் பெற்று உதவி செய்வது போல் செய்து வீடியோ வெளியிடுவார். ஆனால் அதற்குப் பிறகுதான் இருக்கின்றது இவரின் செயற்பாடும். இவர் மூலம் உதவி செய்தவர்கள் மீண்டும் இவருக்கு தொலைபேசி எடுத்து கேட்டுப் பாருங்கள். எப்படியான நுட்பமான செயற்பாட்டை செய்திருப்பார் என அறிவீர்கள்.

இவர் வெளியிடும் வீடியோவைப் பார்ப்பவர்கள் ஒரே நேரத்தில் இவர் மூலம் உதவிகளைச் செய்வார்கள். அவர் ஒருவர் அனுப்பிய காசை வைத்து உதவி செய்த பின்னர் ஏனையவர்களுக்கும் அந்த உதவியையே காட்டி காசைச் சுருட்டி விடுவார். புலம்பெயர் தமிழர்களிடத்தில் உள்ள கருணை மனதை வைத்து இவ்வாறான சிலர் நுட்பமான முறையில் வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறானவர்கள் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பவர்கள் உதவி செய்ய விரும்பினால் குறித்த குடும்பத்திற்கு கிராமசேவையார் மற்றும் பிரதேச செயலக கண்காணிப்பில் நேரடியாக உதவிகளைச் செய்யுங்கள். இவ்வாறான முகவர்கள் மூலம் உதவிகளைச் செய்ய வேண்டாம். ஏனெனில் குறித்த குடும்பத்திடம் இவர்கள் பேரம் பேசியே வரும் உதவியில் தங்களுக்கும் பங்கு தரவேண்டும் என கேட்டே வீடியோக்களை வெளியிடுவது அப்பட்டமான உண்மை. அத்துடன் கிளிநொச்சி மற்றும் ஏனைய இடங்களில் வெளிநாட்டு உதவிகள் வரும் என்பதற்காகவே இவ்வாறான கஸ்ட நிலை என்ற போர்வையில் பலரும் இருக்கின்றார்கள். எந்தவித தொழில் முயற்சியும் செய்யாது வெளிநாட்டு தமிழர்களின் உதவிக்காக காத்திருப்பதும் உண்மை. அவர்களுக்கு ஏற்கனவே பலர் உதவிகள் செய்திருந்தாலும் அவர்கள் நல்ல நிலையில் வருவதற்கு ஆயத்தமாக இல்லை….

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments