Friday, April 19, 2024
Homeதொழில்நுட்பம்புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் கார்களின் விலையை கட கடவென உயர்த்தி வரும் கார் நிறுவனங்கள்!

புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் கார்களின் விலையை கட கடவென உயர்த்தி வரும் கார் நிறுவனங்கள்!

புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், கார் நிறுவனங்கள் தொடர்ச்சியாக விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. மாருதி சுஸுகி (Maruti Suzuki) போன்ற முன்னணி நிறுவனங்கள் வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்து விட்டன. இந்த வரிசையில் ரெனால்ட் (Renault) நிறுவனமும் வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து கார்களின் விலைகளை உயர்த்த போவதாக தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் ரெனால்ட் கார்களின் விலை எவ்வளவு உயர போகிறது? என்ற தகவல் வெளியாகவில்லை. மாருதி சுஸுகி, ரெனால்ட் போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாது, சொகுசு கார் நிறுவனங்களும் விலைகளை உயர்த்துவதற்கு தற்போது முழு வீச்சில் தயாராகி வருகின்றன. இதன்படி மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவன கார்களின் விலை வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து உயரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்களின் விலையை 5 சதவீதம் உயர்த்தவுள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதேபோல் இந்திய சந்தையில் ஆடி (Audi) நிறுவன கார்களின் விலையும், வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து அதிரடியாக உயர்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டு விட்டது.

ஆடி நிறுவனத்தை பொறுத்தவரையில் தனது கார்களின் விலையை 1.7 சதவீதம் வரை உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் பண வீக்கம் போன்ற காரணங்களால் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக கார் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய கார்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள், இந்த விலை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி கார் வாங்குவதாக இருந்தால், அவர்கள் கூடுதல் தொகையை செலவு செய்ய வேண்டியதிருக்கும்.இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களும் வரும் நாட்களில், விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கார் நிறுவனங்களுடன் சேர்ந்து, டூவீலர் நிறுவனங்களும் விலைகளை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே வரும் 2023ம் ஆண்டில் புதிய இரு சக்கர வாகனங்களை வாங்குவதாக இருந்தாலும், கூடுதல் தொகையை நீங்கள் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம்.இதற்கிடையே ரெப்போ விகிதத்தை (Repo Rate), இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India – RBI) உயர்த்தியிருப்பதும், புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித உயர்வு நடவடிக்கை காரணமாக, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்ப வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதுதான் இதற்கு காரணம். பொதுவாக புத்தாண்டில் புதிய வாகனங்களை வாங்க பலரும் திட்டமிடுவார்கள்.அவர்களுக்கு எல்லாம், வாகன உற்பத்தி நிறுவனங்களின் விலை உயர்வு அறிவிப்பும், ரெப்போ விகிதம் உயர்வு காரணமாக வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயரவிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக புதிய வாகனங்களை வாங்கும் முடிவை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பலர் தற்போது ஒத்தி வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வாகனங்களின் விற்பனை குறையுமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புத்தாண்டின் தொடக்கத்திலேயே இந்திய சந்தையில் நிறைய வாகனங்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5), எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் (MG Hector Facelift) மற்றும் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650) போன்ற கார் மற்றும் பைக்குகள் குறிப்பிடத்தகுந்தவை. இவற்றின் விலை எவ்வளவு? என்பதை தெரிந்து கொள்வதற்காக வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments