Friday, March 29, 2024
Homeஉலக செய்திகள்பிரான்ஸில் வதிவிட உரிமையற்றவர்களுக்கு வதிவிட அனுமதி!

பிரான்ஸில் வதிவிட உரிமையற்றவர்களுக்கு வதிவிட அனுமதி!

பிரான்சில் வதிவிட உரிமை இல்லாதவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்குவது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலையில்லாதவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு குடியுரிமை இல்லாததால் வேலை கிடைப்பது கடினம். இதன் காரணமாகவே குடியிருப்பு அனுமதிப்பத்திரம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பிரான்சில் சுமார் 400,000 வேலைகள் காலியாக இருக்கும். எனவே இந்த வெற்றிடங்களை நிரப்ப தொழிலாளர்கள் தேவை. இதன் காரணமாக மேற்படி இடங்களில் வசிக்காதவர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு இந்த தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30,000 பேருக்கு வதிவிட உரிமை வழங்கப்படுகிறது. ஆனால் இந்த வதிவிட அனுமதி பணிகளுக்கு வருபவர்களுக்கு மட்டும் ஓராண்டு தற்காலிக வதிவிட உரிமையை வழங்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலி பணியிடங்களுக்கு பணியாளர்களை சேர்த்துக் கொண்டால், ஓராண்டுக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்படும் என்றும், மேற்படி பணியை முடித்து ஓராண்டுக்குள் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் துறை, உணவகங்கள் போன்ற இடங்களில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த இடங்களில் பணிபுரிவதற்கான விண்ணப்பதாரர்கள் சரியான காரணங்களுடன் தங்கள் முதலாளிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு, இந்த தற்காலிக குடியிருப்பு உரிமை வழங்கப்படும் என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதலாளிகளே மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சரும், வேலைவாய்ப்பு அமைச்சரும் இந்த தகவலை உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments