Wednesday, April 24, 2024
Homeஇலங்கை செய்திகள்பாடசாலை செல்வதாக கூறி மசாஜ் நிலையங்கள் செல்லும் மாணவர்கள் : அதிபர் விடுத்த வேண்டுகோள்!

பாடசாலை செல்வதாக கூறி மசாஜ் நிலையங்கள் செல்லும் மாணவர்கள் : அதிபர் விடுத்த வேண்டுகோள்!

கொழும்பில் பாடசாலை செல்வதாக கூறி மசாஜ் நிலையங்களுக்கு சிறுவர்கள் செல்வதை தடுக்குமாறு அதிபர்கள் ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் பாடசாலை நேரங்களில் மாணவர்கள் மசாஜ் நிலையங்களுக்குச் செல்வது தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் பணத்தைத் திருடி இவ்வாறான இடங்களுக்குச் செல்லும் சிறுவர்கள் பலர் இதற்கு அடிமையாகி வருவதாகவும் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அழைத்து வரும் தாய்மார்களும், மசாஜ் நிலையங்களுக்கு செல்லும் தந்தையர்களும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத மசாஜ் நிலையங்களை நடத்த அனுமதிக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு இந்த வர்த்தகங்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

தற்போது, ​​ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மற்றும் மஹரகம பிரதேச செயலகப் பகுதிகளிலேயே அதிக மசாஜ் நிலையங்கள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments