Wednesday, April 24, 2024
Homeஇலங்கை செய்திகள்பருப்பு போன்ற பல அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் : மகிழ்ச்சியை ஏற்படுத்திய அமைச்சரின்...

பருப்பு போன்ற பல அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் : மகிழ்ச்சியை ஏற்படுத்திய அமைச்சரின் அறிவிப்பு!

பருப்பு போன்ற பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 20% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியதை தொடர்ந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு பாரியளவில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை 1 கிலோ பருப்பின் விலை சுமார் 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments