Saturday, April 20, 2024
Homeஇந்திய செய்திகள்பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான தமிழர்கள்…நஞ்சு உடைய பாம்பை, தீரத்துடன் பிடிக்கும் வீரர்கள்.

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான தமிழர்கள்…நஞ்சு உடைய பாம்பை, தீரத்துடன் பிடிக்கும் வீரர்கள்.

எவ்வித பயமுன்றி விஷ பாம்புகளை பிடிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருது வென்ற பாம்பு பிடி வல்லவர்கள்

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பர்.. ஆனால், இவர்களின் கைகளில் மட்டும் பாம்புகள் அடங்குகின்றன. பாம்பு பிடிப்பதை தொழிலாகக் கொண்ட வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன், செங்கல்பட்டு மாவட்டம் சென்னேரி கிராமத்தை சேர்ந்தவர்கள். எத்தகைய நஞ்சு உடைய பாம்பாயினும், லாவகமாக பிடிப்பதில் இருவரும் வல்லவர்கள். தொழிலை திறம்பட செய்ததால், இருவரின் புகழ் உலகெங்கும் எட்டியது. கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாண உயிரியல் பூங்காவில் மலைப்பாம்புகள் தொல்லை அதிகரித்தது. இதனை சமாளிக்க வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் கூட்டணியை அமெரிக்கா அரசு உதவிக்கு அழைத்தது. அதன் பேரில் அமெரிக்கா சென்ற இருவரும் சுமார் 2 மாதம் தங்கியிருந்து 33 பாம்புகளை பிடித்தனர்.

அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற இவர்கள், தங்கள் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த முறையை பின்பற்றியே பாம்புகளை பிடித்து வருகின்றனர். நஞ்சு உடைய பாம்பை, தீரத்துடன் பிடிக்கும் வீரர்களுக்கு இன்று பத்மஸ்ரீ விருது கிட்டியுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள மாசி சடையன் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பாம்புகளை பிடித்துள்ளோம்; விஷத்தன்மையுள்ள ராஜநாக பாம்புகளை அதிகளவில் பிடித்துள்ளோம்; கண்ணாடி விரியன், நல்ல பாம்பு உள்ளிட்ட பாம்புகள் தன்னை பலமுறை சீண்டி உள்ளன என்றும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments