Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்பணியாளர்களை ஜாதகம் பார்ப்பதற்கு அழைத்து சென்ற வைத்தியர் : வெடித்த சர்ச்சை!

பணியாளர்களை ஜாதகம் பார்ப்பதற்கு அழைத்து சென்ற வைத்தியர் : வெடித்த சர்ச்சை!

ஜாதகம் பார்ப்பதற்காக மருத்துவமனை ஊழியர்களை அரசு ஆம்புலன்சில் அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தென் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சந்திம பதிங்க நேற்று (21) இதனை அறிவித்தார்.

கடந்த புதன்கிழமை (17) காலை உத்தியோகபூர்வ உடையில் ஐவர் அடங்கிய குழுவொன்று ஜாதகம் பார்ப்பதற்காக சுமார் 40 கிலோமீற்றர் தூரம் பயணித்துள்ளது.

பாடசாலை ஒன்றிற்கு அருகில் உள்ள ஜோதிட நிலையம் ஒன்றின் முன்பாக நோயாளர் காவு வண்டி ஒன்று சுமார் 02 மணித்தியாலங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த சிலர், ஆம்புலன்ஸை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.

நோயாளர் சேவைக்காக பயன்படுத்தப்படும் அரச வாகனங்களை அனுமதியின்றி பயன்படுத்தியமை முற்றிலும் தவறானது எனவும் உடனடியாக விசாரணை நடத்தப்படும் எனவும் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சந்திம சிறிதுங்க அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments