Thursday, April 18, 2024
Homeவிளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20.. வெற்றியை தொடருமா இந்தியா?

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20.. வெற்றியை தொடருமா இந்தியா?

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் மொத்தம் 3 ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் பங்கேற்றுள்ளது. ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தும் நிலையில், இஷான் கிஷன், ஷுப்மன் கில் தொடக்கவீரர்களாக களம் இறங்குகின்றனர்.

பிரித்தீவ் ஷா அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவருக்கு விளையாட இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து ருத்துராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.

ஒரு நாள் தொடரை முழுமையாக இழந்துவிட்ட நிலையில், டி20 போட்டியிலாவது வெல்ல நியூசிலாந்து அணி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் போட்டியில் ஆடிய ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில் பல வீரர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments