Tuesday, April 16, 2024
Homeவிளையாட்டுநாளை இறுதி போட்டியில் மோதும் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகள்.

நாளை இறுதி போட்டியில் மோதும் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகள்.

8-வது மகளிர் T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர்
அணிகள் தகுதி பெற்றுள்ளன. முதலில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இரண்டாவதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா
அணிகள் மோதின இதில் இங்கிலாந்தை 6 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்கா மகளிர் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இரு அணிகளுக்குமிடையிலான இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது.அஸ்திரேலிய மகளிர்
அணி 5 முறை T20 உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments