Friday, April 19, 2024
Homeஇலங்கை செய்திகள்நாட்டில் மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு : பொதுமக்களுக்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!

நாட்டில் மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு : பொதுமக்களுக்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண பொதி வழங்கவுள்ளதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இத்திட்டமானது எதிர்வரும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இத்தகவலினை அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு போன்ற இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்கு ரூபாவிற்கு எதிரான டொலரின் மதிப்பு அதிகரிப்பு காரணமாகும்.இதனால் வாழ்க்கைச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது. 203 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி இன்று 365 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அந்நியச் செலாவணி அதிகரித்ததன் காரணமாக பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. இதன்மூலம் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் உயர்வடைந்துள்ளது.

விலைவாசி உயர்வைத் தடுக்க முடியாத நிலை இருக்கிறது. திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வெளிநாட்டு உதவிகளின் ஊடாக உதவ திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments