Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்நாட்டில் அனைத்து எரிபொருந் நிலையங்களின் வருமானத்தில் பெரும் வீழ்ச்சி: வெளியான அறிவிப்பு!

நாட்டில் அனைத்து எரிபொருந் நிலையங்களின் வருமானத்தில் பெரும் வீழ்ச்சி: வெளியான அறிவிப்பு!

முன்பு இருந்ததைவிட தற்பொழுது நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வருமானத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இவர் நேற்றையதினம் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் நாட்டில் தேசிய எரிபொருள் உரிமம் அல்லது கியூ.ஆர் அட்டை முறையில் எரிபொருள் விநியோகம் செய்யும் முறை ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கு முன்னரே இந்த விலைச்சரிவு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

12 முதல் 15 பவுஸர்களில் எரிபொருள் கியூ.ஆர் அட்டை நடைமுறைப்படுத்த முன்னதாக வாராந்தம் கிடைத்ததாகவும் ஆனால் தற்போது 4 முதல் 5 பவுஸர்களில் எரிபொருள் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 998 எரிபொருள் நிரப்பு நிலையங்களு இதனால் பாரி சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த தாக்கமானது இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டுய்யள்ளார்.

நாட்டில் அனைத்து மக்களுக்கும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டாலும் எரிபொருள் நிலையத்தில் பணியாற்றிவரும் ஊழியர்கள் சம்பளம் மற்றும் நீர்க்கட்டணம், பவுஸர் சாரதி சம்பளம் ஆகியவைகளில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விலையை அதிகரித்தாலும் பரவாயில்லை போதிய அளவு எரிபொருளை வழங்குமாறு ஊழியர்கள் பலர் கூறிவருகிறார்கள் என இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments