Wednesday, April 17, 2024
Homeஇலங்கை செய்திகள்நாட்டின் சில மாவட்டங்களில் மழை பெய்யகூடும்!

நாட்டின் சில மாவட்டங்களில் மழை பெய்யகூடும்!

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் மற்ற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என்று அது கூறியுள்ளது.

கொழும்பில் இருந்து காலி வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காற்று வடகிழக்கு திசையில் வீசும், காற்றின் வேகம் மணிக்கு 20-30 கிலோ மீற்றர் மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து

அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சற்று மிதமானதாக இருக்கலாம்.

மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அண்மித்த கடற்பரப்புகள் அதிகரித்துள்ள அலைகளின் காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பாகவும் அலைவுகளுடனும் காணப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments