Friday, April 19, 2024
Homeஇந்திய செய்திகள்திமுகவுடன் பாமக கூட்டணியா?… அன்புமணி விளக்கம்..!

திமுகவுடன் பாமக கூட்டணியா?… அன்புமணி விளக்கம்..!

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க விடமாட்டோம் என்றார். சேலம் மாநகரில் 3 தலைமுறையாக பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையாமல் உள்ளதாக சாடிய அவர், மேட்டூர் உபரிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். என்.எல்.சி நிறுவனத்தின் விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்திற்கு, முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்தார்.

2026 ல் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதற்கான பணி நாடாளுமன்ற தேர்தலில் துவங்கப்படும் என்றும் குறிப்பிட்ட அன்புமணி, “

திமுக உடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை; வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.

லாபத்தில் இயங்கும் கேஸ் நிறுவனங்கள், கேஸ் விலையை உயர்த்தக் கூடாது. உயர்த்தப்பட்ட விலையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். நல்ல திரைப்படங்களை வாழ்த்துக்கிறேன். அவ்வளவுதானே தவிர நான் எந்த இயக்குனர்களையும் இயக்கவில்லை. நிழல் நிதிநிலை அறிக்கை இந்த வாரம் பாமக சார்பில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை எனவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments