Thursday, April 25, 2024
Homeஇந்திய செய்திகள்தஞ்சை மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள்…மக்கள் என்ன நினைக்கிறார்கள் ..?

தஞ்சை மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள்…மக்கள் என்ன நினைக்கிறார்கள் ..?

தஞ்சை மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொதுமக்களிடம் நிறை, குறைகள் பற்றி கேட்டு அறிந்தோம். ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணிகள் குறித்து மக்களின் பார்வை தெரிந்துகொள்ளலாம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தஞ்சாவூர் நகராட்சி‌ தமிழக அரசால் மாநகராட்சியாக மாற்றப்பட்டநிலையில்,செப்டம்பர் 2016 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் சிட்டி சேலஞ்ச் போட்டியில் தஞ்சாவூர் மாநகராட்சிஇரண்டாவது சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டது. பின்னர், தஞ்சாவூர் நகரத்தின்அடிப்படை மேம்பாட்டிற்கானமுன்மாதிரி வடிவமைப்பு முன்மொழிக்கப்பட்டது. இதில் தற்போது இருக்கும் நகரத்தின் அடையாளம் மற்றும் கட்டுமானங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வலுவான கட்டுமானங்களுடன் நிறைய பணிகள் மேற்கொள்ளப்படும் என‌ அறிக்கையில் கூறப்பட்டது.

தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பணிகள்:சுமார் 1289.5 கோடி ரூபாய் மதிப்பில் தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டிக்கு சுற்றுலா, பசுமைவெளி, பொருளாதார மேம்பாடு, நகர்ப்புற போக்குவரத்து, நீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் சாலைகள்/மோட்டார் அல்லாத போக்குவரத்து (என்எம்டி) போன்ற பல்வேறு துறைகளில் இருந்துதிட்டங்கள் முன்மொழியப்பட்டது. மேலும் கலாச்சார நகரமாக தஞ்சை இருப்பதால் அதை இன்னும் மேம்படுத்தஅறிவிக்கப்பட்டது.

தற்போது தஞ்சை மாநகரத்தில் பல்வேறு வகையான ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில வேலைகளின் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து தஞ்சை நகர பொதுமக்களின் நிறை குறைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொண்டோம். இதுகுறித்து பேசிய அவர்கள், ‘

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியால் தஞ்சை மிகவும் மாறியுள்ளது. முக்கியமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையம்,ராஜபாப் பூங்கா இவையெல்லாம் சீரமைக்கப்பட்டு மிக அருமையாக இருக்கிறது.மேலும் பழைய ஆட்சியர் அலுவலகம்அருங்காட்சியகம் ஆகவும் பறவைகள் பூங்காவாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.டிராபிக் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாம் அருமையாக தான் இருக்கிறது.ஆனால் சிறு, சிறு பகுதிக்குள் செல்லும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. குறிப்பாக பாதாள சாக்கடை பணிகள் பல இடங்களில் நிலுவையில் உள்ளன.பல பகுதிகளில் வடிகால் வசதி கூட இல்லாமல் இருக்கின்றது.பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது என்றும் பலர் பலர் விதமான கருத்துக்களை தெரிவித்தனர்.

ஒரு சில பெண்கள்ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து பெரிதளவில் எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே நாங்கள் கையசத்தால் ஓட்டுனர்கள் பேருந்தைநிறுத்துவதில்லை. இது பல இடங்களில் நடந்து வரும் அவலமாகவே பார்க்கப்படுகிறது என்றும் கூறினர்.

மேலும் ஒரு சிலர் தஞ்சை மாவட்ட ஆட்சியர், ஆணையர் மிகவும் அருமையாக செயல்பட்டு கொண்டு உள்ளதாகவும் இன்னும் நிறைய பணிகளை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது எனவும் கூறினார்கள்.

மேயர் மிக அருமையாக செயல்பட்டு வருவதாகவும் தற்போது கூட மாநகராட்சி அலுவலகத்திற்கு வராமலேயே மக்கள் மனுக்களை ஸ்மார்ட் தஞ்சை ஆப் மூலம் தெரிவிக்க மென்பொருள் வசதிகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதுபோன்ற பல வசதிகள் ஏற்படுத்தி இருந்தாலும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளின் குறைகளை கண்டுகொள்வது இல்லை.

வெறும் வெற்று பார்வையிடலாக மட்டுமே இருக்கிறது. மாநகராட்சி வளர்ச்சி பணிகளை மட்டுமே செய்கிறார்கள். மக்களவளர்ச்சி பற்றி கண்டுகொள்வது இல்லை எனவும் பொதுமக்கள் பலர் கூறுகிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments