Thursday, April 25, 2024
Homeசினிமாஜி.பி.முத்துவா, ஜனனியா?: வலி தாங்காமல் முதலில் விழப் போவது யாரு?

ஜி.பி.முத்துவா, ஜனனியா?: வலி தாங்காமல் முதலில் விழப் போவது யாரு?

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் நாமினேஷனை துவங்கி வைத்தார்கள். குவின்ஸியை நாமினேட் செய்தார் ஜி.பி. முத்து.

இந்நிலையில் இரண்டாவது ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கேப்டன்ஸி டாஸ்க்கை காட்டியுள்ளனர்.

கைப்பிடியுடன் கூடிய கடிகாரத்தில் சாந்தி, ஜனனி, ஜிபி முத்து ஆகியோர் நிற்கிறார்கள். வலி தாங்காமல் சாந்தி இறங்கிவிட்டார்.

ஒரு மணிநேரம் ஆனபோதிலும் ஜனனியும், ஜி.பி. முத்துவும் கீழே இறங்குவதாக இல்லை. இதில் ரஜினியின் முத்து படத்தில் வந்த பாடலை ஜி.பி. முத்துவை பார்த்து பாடுகிறார் ஜனனி.

ஜெயிக்கப் போவது ஜனனியா, முத்துவா என்பதை பார்க்க பார்வையாளர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

டாஸ்க் என்று வந்துவிட்டால் ஜனனி கெத்து தான். ஜனனி ஹேட்டர்ஸுகளுக்ககாவே இந்த வீடியோ.
இந்த சீசனில் புதுசா யோசிக்கிறார் பிக் பாஸ். அதை பாராட்டியே ஆக வேண்டும்.

முதல் கேப்டன் எங்க அண்ணன் ஜி.பி. முத்து தான் என்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க அசல் கோலாரை தண்டிப்பீர்களா, மாட்டீர்களா பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். குவின்ஸியின் அனுமதி இன்றி அவரின் கையை விடாமல் தடவிய அசலின் சேட்டையை பார்த்தால் எங்களுக்கே கடுப்பாகுது பிக் பாஸ்.

முதல் ஆளாக இந்த அசல் பக்கியை விரட்டுங்க பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments