Friday, April 19, 2024
Homeஉலக செய்திகள்ஜப்பான் கடலில் சரக்குக் கப்பல் மூழ்கியதில் இருவர் பலி – ஒன்பது பேரைக் காணவில்லை.

ஜப்பான் கடலில் சரக்குக் கப்பல் மூழ்கியதில் இருவர் பலி – ஒன்பது பேரைக் காணவில்லை.

ஜப்பானுக்கு அருகில் சரக்குக் கப்பலொன்று மூழ்கியதில் இருவர் உயிரிழந்துடன், ஒன்பது பேர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் மூழ்கிய சரக்குக் கப்பலில் இருந்து 13 பணியாளர்கள் மீட்கப்பட்ட போதிலும், அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துளதாக அந்நாட்டு கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 9 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

6,651 டன் எடையுள்ள ஹொங்கொங்கில் பதிவுசெய்யப்பட்ட “ஜிண்டியன்” என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கப்பலில் பயணித்த 22 பணியாளர்களும் சீன மற்றும் மியன்மார் நாட்டினர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கப்பல் கவிழ்ந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடி தகவல் இல்லை. அப்போது பலத்த காற்று வீசியதாக கடலோர காவல்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

கடலோர காவல்படை உடனடியாக நாகசாகிக்கு மேற்கே உள்ள ரோந்து படகுகள் மற்றும் விமானங்களின் உதவியை நாடியதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹிரோகாசு மாட்சுனோ கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments