Thursday, March 28, 2024
Homeஇலங்கை செய்திகள்ஜனவரி முதல் ராணுவத்தினர் பாடசாலைகளில் போதைப்பொருளை ஒழிக்கும் வேலைத்திட்டத்த்தின் ஊடாக சோதனை நடவடிக்கை ஆரம்பம் !

ஜனவரி முதல் ராணுவத்தினர் பாடசாலைகளில் போதைப்பொருளை ஒழிக்கும் வேலைத்திட்டத்த்தின் ஊடாக சோதனை நடவடிக்கை ஆரம்பம் !

பாடசாலைகளில் போதைப்பொருளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்துடன் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் மாத்திரமன்றி பாடசாலை மாணவர்களின் பஸ்கள் மற்றும் வான்களும் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளில் போசாக்கு திட்டத்திற்கு மேலதிகமாக, போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், நாடு முழுவதிலும் உள்ள 10,150 பாடசாலைகளை உள்ளடக்கிய 100 கல்வி வலயங்களில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலைத்திட்டம் தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களும் அனைத்து மாகாண பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மேலதிக அறிவுறுத்தல்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கல்வி அமைச்சின் செயலகத்தினால் வெளியிடப்படும்.

பாடசாலை நேரம் முடிந்து வெளியூர்களுக்குச் செல்லும் மாணவர்கள் தனி வகுப்புகளாகச் செல்வது தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments