Saturday, April 20, 2024
Homeவாழ்வியல்சத்துக்கள் நிறைந்த பேரீச்சை பழம் எந்த நேரத்தில் சாப்பிட்டால் முழு சத்துக்களை பெற முடியும்!

சத்துக்கள் நிறைந்த பேரீச்சை பழம் எந்த நேரத்தில் சாப்பிட்டால் முழு சத்துக்களை பெற முடியும்!

இனிப்பு சுவைமிக்க பழம் என்பதை கடந்து பேரிட்சையில் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துகள் உள்ளன.

பழங்கள் அதிகம் சாப்பிடும் பழக்கத்தை கொண்ட மக்கள் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. நாம் உண்பதற்கு உகந்த பழங்கள் எல்லாமே உடலுக்கு நன்மை தரக்கூடியது. நிறைய பேர் டயட்டில் இருக்கும்போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏனென்றால் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, டயட் கடைபிடிப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் பேரிச்சை சாப்பிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதனையும் சிலர் ஊறவைத்து சாப்பிடுவார்கள், மற்றவர்கள் பச்சையாக சாப்பிடுவார்கள். இதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. காலையில் பேரிட்சை பழத்தை சாப்பிடலாமா? எப்படி சாப்பிட வேண்டும் என கேள்வி எழுபவர்களுக்கு, பதில் இங்கு உள்ளது.

பேரிட்சை பழம் ஏன் சாப்பிட வேண்டும் ?

இனிப்பு சுவைமிக்க பழம் என்பதை கடந்து பேரிட்சையில் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துகள் உள்ளன. இரும்புச் சத்து, ஃபோலேட், புரோட்டின், நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி 6 ஆகியவை நிறைந்து இருக்கின்றன.

பேரிட்சை பழத்தை எப்போது சாப்பிடலாம் ?

உணவை உட்கொள்ளும் போதெல்லாம் நம் உடலுக்கு ஜீரணிக்கும் திறன் உள்ளது. ஆனால், எந்தநேரத்தில் எத்தனை சாப்பிட வேண்டும் என்பதற்கு சில வழிமுறைகள் இருப்பதால், கவனமாக இருக்க வேண்டும். எரிச்சல் கொண்ட குடல் நோய் (IBS) அறிகுறிகள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி நேரத்துக்கு தகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பேரிட்சம் பழத்தை சாப்பிடும்போது ஜீரணிப்பதில் சிரமம் ஏற்பட்டு அசௌகரியத்தை உணர நேரிடும். பேரிட்சம் பழங்களில் பிரக்டோஸ் இருப்பதால், வெறும் வயிற்றில் உண்ணும்போது சிலருக்கு வயிற்று வலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்து, கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். ஆனால், ஜீரணிக்க நீண்ட நேரம் எடுத்துகொள்ளும். வாயு மற்றும் வயிறு வீக்கத்துக்கு உங்களை அழைத்து செல்லும். உணவு ஒவ்வாமை அல்லது வயிற்றுபோக்கு பாதிக்கப்பட்டவர்கள் பேரிட்சை சாப்பிடுவதை தவிர்க்கலாம். சிறிய துண்டுகளாக குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக்கொள்வது ஆகச்சிறந்தது.

காலையில் ஏன் சாப்பிட வேண்டும் ?

 அதிகாலையில் பேரிட்சை பழம் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கும். மேலும், காலையில் இவற்றை உட்கொள்வது குடல் புழுக்களைக் கொல்ல உதவுகிறது. இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், முக்கிய உறுப்புகளில் உள்ள கழிவுகளையும் சுத்தப்படுத்தும் ஆற்றல் பேரிட்சைக்கு உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் சருமம் பொலிவு பெறும், கூந்தல் வலிமையடையும். பல்வேறு ஆய்வுகளின்படி, பேரிட்சையை அன்றாடம் சாப்பிடும்போது உடல் ஆற்றல் அதிகரிக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments