Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்சட்டவிரோதமாக 2030 லீற்றர் பெற்றோலை கடத்திய சந்தேக நபர்கள் கைது!

சட்டவிரோதமாக 2030 லீற்றர் பெற்றோலை கடத்திய சந்தேக நபர்கள் கைது!

கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி மாலை கல்பிட்டி செங்குமலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்ல தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 2030 லீற்றர் பெற்றோலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட எரிபொருளுடன் மூன்று சந்தேக நபர்களும் இரண்டு லொறிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கையில், வடமேற்கு கடற்படை கட்டளையின் SLNS விஜயா கல்பிட்டி செங்குமலாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான 02 லொறிகளை சோதனையிட்டதுடன், சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்ல தயார் செய்யப்பட்ட சுமார் 2030 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கல்பிட்டி, வாரியபொல மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 28 முதல் 48 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட பெட்ரோலின் சந்தை மதிப்பு ரூ. 900,000. சந்தேகநபர்கள் பெற்றோல் மற்றும் சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments