Friday, April 19, 2024
Homeஇலங்கை செய்திகள்கொழும்பில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்! திடீர் போராட்டம் தீவிரம்!

கொழும்பில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்! திடீர் போராட்டம் தீவிரம்!

கொள்ளுப்பிட்டி சந்தியில், நீதிமன்ற தடை உத்தரவை பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் வாசித்தனர்.

இதன்போது, ​​ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரை கற்களால் தாக்கியதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும், தற்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்தலை நோக்கி நகர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு பௌடாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் எதிர்ப்பு பேரணியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது காவல்துறை.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு பௌடலோக மாவத்தையில் ஒன்று கூடியுள்ளனர்.

அவர்கள் அங்கு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் போராட்டம் நடத்தப்படவிருந்த நிலையில், அங்கு பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தை இரகசியமாக மாற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பௌதாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவிருந்த அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களும் பௌடலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக பகுதிக்கு விரைந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று விரைவில் நடத்தப்படவுள்ளது.

வசந்த முதலிகேவை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரியும், மக்கள் வாழ்வதற்கான அமைதியான சூழலை ஏற்படுத்தக்கோரியும் இந்த இயக்கம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments