Wednesday, April 24, 2024
Homeஉலக செய்திகள்கூகுள், 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம்…சுந்தர் பிச்சையும் விலக வேண்டும்!!!

கூகுள், 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம்…சுந்தர் பிச்சையும் விலக வேண்டும்!!!

பொருளாதார நிலைத்தன்மையை காரணம் காட்டி உலகம் முழுவதிலும் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடைபெற்று வருகிறது. பிரபல முன்னணி நிறுவனமான கூகுள், 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் இழப்பை சந்தித்ததற்கு அதன் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையும் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று பணி இழந்த ஊழியர்கள் போர்கொடி தூக்கியுள்ளனர். இதனிடையே கடந்த காலாண்டில் லாபம் ஈட்டிய கூகுள் நிறுவனம், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது ஏன் என்றும் தொழிலாளர் நலவாரியம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதே போன்று மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் சத்ய நாதல்லாவிற்கும் ஐ.டி. ஊழியர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வேலையிழந்தவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.பிரபல முன்னணி நிறுவனங்களே ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினால், சிறிய நிறுவனங்களுக்கு அது தவறான முன்னுதாரணமாக அமையும் என்று தொழிலாளர் நலவாரியத்தினர் தெரிவித்தனர். எனவே, ஆட்குறைப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு பல்வேறு தரப்பில் இருந்து ஐ.டி. நிறுவனங்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments