Saturday, April 20, 2024
Homeஅரசியல்செய்திகாங்கிரஸ் கட்சிக்கு நிதிஷ்குமார் அட்வைஸ் …நான் சொல்வதை கேளுங்கள்!! பாஜகவை சுருட்டிவிட முடியும்..!

காங்கிரஸ் கட்சிக்கு நிதிஷ்குமார் அட்வைஸ் …நான் சொல்வதை கேளுங்கள்!! பாஜகவை சுருட்டிவிட முடியும்..!

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய நிதிஷ் குமார் எதிரணியான ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் புதிய கூட்டணி அரசை அமைத்தார்.துணை முதலமைச்சராக கூட்டணி கட்சியின் தேஜஸ்வி யாதவ் உள்ளார்.

இந்நிலையில், வரப்போகும் 2024 மக்களவை பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி ஒருங்கிணைந்து கூட்டணி அமைத்து பாஜகவை எதிர்கொள்ள வேண்டும் என நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விழாவில் பங்கேற்றி நிதிஷ் குமார் இது தொடர்பான தனது கருத்தை வெளியிட்டார். இந்த விழாவில் காங்கிரஸ், ஆர்ஜேடி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்களும் உடன் இருந்தனர்.

விழா மேடையில் பேசிய நிதிஷ் குமார், “நான் காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நல்ல வெற்றியை பெற்றுள்ளது.இதை இத்தோடு நிறுத்திவிடாமல், காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிரான கூட்டணியை கட்டுமைக்க வேண்டும். பழம் பெருமையை பேசி குளிர் காய்வதை காங்கிரஸ் நிறுத்திவிட்டு, எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

எனக்கென்று எந்த எதிர்கால ஆசைகளும் இல்லை. எனது அறிவுரையை கேட்டு காங்கிரஸ் கட்சி நடந்தால், தற்போது 300 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை ஆட்சியில் உள்ள பாஜக வரும் தேர்தலில் 100 இடங்களுக்கு கீழ் சுருண்டு விடும். இல்லை என்றால் 2024இல் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். பீகாரில் நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, அக்கட்சி மாநிலத்தில் தடம்பதிப்பதை நிறுத்தி காட்டியுள்ளோம். இதை நாம் தேசிய அளவிலும் ஒன்றிணைந்து சாதித்து காட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments