Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்கடலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை - அலி சப்ரி

கடலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை – அலி சப்ரி

நேற்று முன்தினம் வியட்நாம் கடற்பரப்பில் கனடா செல்ல சென்ற 300 இலங்கையர்களை கடலில் தத்தளளித்த வண்ணம் மீட்டுள்ளனர்.

இவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருவதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கையர்கள் கடலில் மூழ்கும் நிலையில் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் தெரிவித்ததாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments