Wednesday, April 24, 2024
Homeஇலங்கை செய்திகள்கடன் காசிற்காக கணவன் முன்பாக மனைவி கூட்டு வல்லுறவு; தமிழ் பெண் உள்ளிட்ட 10 பேர்...

கடன் காசிற்காக கணவன் முன்பாக மனைவி கூட்டு வல்லுறவு; தமிழ் பெண் உள்ளிட்ட 10 பேர் கைது!

தனது கணவருக்கு முன்பாக இளம் பெண்ணொருவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட 10 சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு புளூமெண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த குற்றச் சம்பவம் நடந்தது.

கேரகல பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், கொழும்பில் உள்ள போதைப்பொருள் வியாபாரியிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வாங்கியுள்ளார். இதன் பெறுமதி ரூ.600,000 இலட்சமாகும்.

கொழும்பு வியாபாரியிடம் வாங்கிய போதைப்பொருளிற்கான பணத்தை அந்த இளைஞன் வழங்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கொழும்பு வர்த்தகர், கேரகல இளைஞனை பழிவாங்க திட்டமிட்டு, ஒரு சூழ்ச்சி செய்துள்ளார்.

இளைஞனை தொடர்பு கொண்டு, மேலும் போதைப்பொருள் உள்ளதாகவும், அதை வந்து எடுத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார்.

இதை நம்பிய இளைஞன், தனது இளம் மனைவியுடன் கொழும்பிலுள்ள போதைப்பொருள் வியாபாரியிடம் சென்றுள்ளார். அவர்களை போதை வியாபாரி குழுவினர் கடத்திச் சென்று, துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றில் அடைத்து வைத்து, பணத்தை கேட்டுள்ளனர்.

காதலனை கட்டி வைத்து விட்டு, அவரது கண்முன்பாகவே காதலியை கூட்டாக பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியுள்ளனர். அதனை வீடியோவாக பதிவும் செய்தனர். போதை வியாபாரியின் மனைவியே தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

அண்டை வீட்டில் வசித்து வந்த கணவனும் மனைவியும் இந்த துஷ்பிரயோகத்திற்கு உதவியுள்ளனர்.

பின்னர் இளைஞனின் தாயாரிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, மகனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்காமலிருப்பதெனில் உடனடியாக 3 இலட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிடுமாறு மிரட்டியுள்ளனர்.

குடும்பத்தினர் பொலிசாரிற்கு அறிவித்ததை தொடர்ந்து, கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள வீட்டை புளூமெண்டல் பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

போதைப்பொருள் விற்பனையாளர் உட்பட 10 பேரை பொலிஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்தி விளக்கமறியலில் வைத்தனர். அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, நவம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சந்தேகநபர்கள் நிபுன் தாரக, கசுன் பிரபாத், மலையப்பன் ஸ்ரீ காந்தன், ஸ்ரீ காந்த ஆரியப்பன், ஜீவனத்தெதுனு அபேநாயக்க, ஹெட்டியாராச்சிகே துலாஞ்சலி, விஸ்வகுமார சமுதி, ராஜு காயத்திரி, எட்வர்ட் லக்ஷ்மன் மற்றும் மொஹமட் நியாஸ் மொஹமட் ரில்வான் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments