Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்ஏசியில் அதிக நேரம் இருந்தால் முடி கொட்டுமா?

ஏசியில் அதிக நேரம் இருந்தால் முடி கொட்டுமா?

இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல். இந்த முடி உதிர்வைத் தவிர்க்க நிறைய பணம் செலவழித்து மருந்துகளை உபயோகிக்கிறார்கள். ஆனாலும் முடி உதிர்வது நிற்காது

இந்நிலையில் நமது உணவுப் பழக்கம் மற்றும் நடைமுறைப் பழக்கவழக்கங்களே முடி உதிர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஏ.சி.யில் அதிகமாக வெளிப்படுவதால் பொடுகு மற்றும் முடி உதிர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

முடி உதிர்தல், தோல் நோய் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு மன அழுத்தமும் ஒரு காரணம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். உடல் பராமரிப்பு குறித்த அக்கறையும், விழிப்புணர்வும் அதிகரித்து வரும் நிலையில், அதிக நேரம் ஏசியில் இருப்பதை தவிர்க்க வேண்டும், இதனால் முடி மட்டுமின்றி உடல் ஆரோக்கியமும் மேம்படும் என கூறப்படுகிறது.

நம் முன்னோர்கள் இயற்கையாக வாழ்ந்த போது உடல் உபாதைகள் ஏதுமின்றி வாழ்ந்தாலும் செயற்கையாக பல்வேறு வசதிகளை செய்த பிறகே முடி உதிர்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments