Thursday, April 25, 2024
Homeஅரசியல்செய்திஉதயநிதிக்கு அளிக்கப்படும் அமைச்சர் பதவி…14 அம் தேதி பதவியேற்பார் என தகவல்…

உதயநிதிக்கு அளிக்கப்படும் அமைச்சர் பதவி…14 அம் தேதி பதவியேற்பார் என தகவல்…

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் வருகிற 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கடிதம் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் அமைச்சராக உள்ள உதயநிதிக்கு தலைமை செயலகத்தில் முழு வீச்சில் புதிய அறை தயாராகி வருவதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.இதேபோல, சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றி அமைக்கப்படுகின்றன. குறிப்பாக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித் துறையும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த கே.ஆர்.பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறையும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments