Friday, April 19, 2024
Homeவாழ்வியல்உங்களுக்குத் தெரியுமா? காலையில் இதை செய்தால் ஆயுள் கூடுமாம்!

உங்களுக்குத் தெரியுமா? காலையில் இதை செய்தால் ஆயுள் கூடுமாம்!

வேலை , மொபைல் என நடுஇரவுவரை விழித்திராது, ஒருவர் எப்போதும் வேளைக்கு படுத்துறங்கி, அதிகாலை எழுவது நீண்ட ஆரோக்கியத்திற்கு வித்திடும். அவ்வாறு செய்தால் அதிகாலை எழும்போது உடல் உபாதை பிரச்சனைகள் இருக்காது.

அந்தவகையில் கீழ்வரும் இந்த மூன்று விடங்களை நீங்கள் ஒழுங்காக கடைப்பிடித்தால் எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்

காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க மறக்கக்கூடாது. ஒரு லிட்டர் தண்ணீராவது குடித்தீர்கள் என்றால், உடல் கழிவுகள் மளமளவென வெளியேறிவிடும். சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி செய்ய தொடங்க வேண்டும்.

முதலில் சில வாரம் அப் உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு, அதன்பின் கடினமான பயிற்சிகளை செய்யத் தொடங்குங்கள்.

காலை நேரம் மிகவும் அமைதியான நேரம். அந்த நேரத்தில் மனமும் உடலும் மிகவும் அமைதியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் தியானம் செய்தால் மன ஒருமைப்பாடு மேம்படும். சிந்தனை கூர்மையும், தெளிவான பார்வையும் உங்களிடம் இருக்கும்.

யோகா பயிற்சிகளையும் செய்யலாம். இயற்கை எழில்கொஞ்சும் பகுதியில் இதனை நீங்கள் செய்தால், நிச்சயம் ரிலாக்ஷாக உணர்வீர்கள்.

காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதனை நீங்கள் எப்போதும் தவறவிடக்கூடாது. அந்த உணவில் நிறைய காய்கறிகள், கீரை இருப்பது அவசியம். ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் உடல் உபாதைகள் ஏதும் ஏற்படாது.

எனவே தினமும் உங்கள் நாளை சுறுசுறுப்புடன் ஆரம்பித்து மகிழ்ச்சியாக கழியுங்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments