Friday, April 19, 2024
Homeஅரசியல்செய்திஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக தனித்து போட்டியா? - நயினார் நாகேந்திரன் விளக்கம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக தனித்து போட்டியா? – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து, அதிமுக, பாஜக கட்சி தலைமைகள் முடிவெடுக்கும்” என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments