Thursday, April 25, 2024
Homeசினிமாஇவர்தான் பிக்பாஸ் சீசன் 6 வின்னர்…!!எதிர் பாராததை எதிர் பாருங்கள் .

இவர்தான் பிக்பாஸ் சீசன் 6 வின்னர்…!!எதிர் பாராததை எதிர் பாருங்கள் .

21 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. கடந்த சீசன்களை போல் இந்த சீசனில் சுவாரசியம் சற்று குறைவாகவே இருப்பதாக ரசிகர்களின் கருத்தாக இருந்துவருகிறது.

சமீபத்தில் விஜே கதிரவன் பணப்பெட்டி டாஸ்க்கில் ரூ.3 லட்சத்தைஎடுத்து்கொண்டு வெளியேறினார். அதன் பிறகு நடந்த எவிக்ஷனில் மைனா நந்தினி வெளியேறினார். தற்போது பிக்பாஸ் வீட்டில், விக்ரமன், ஷிவின் அசீம் ஆகிய 3 பேர் மட்டுமே உள்ளனர்.

மூன்று பேருமே கடுமையான போட்டியாளர்கள் என்பதால் வெல்லப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பிக்பாஸ் தமிழ் 6 போட்டியின் வெற்றியாளருக்கு ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம், ஷிவினை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளதன் காரணமாக அசீம் வெற்றிபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விக்ரமன் 2வது இடத்தையும், ஷிவின் 3வது இடத்தையும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments