Friday, March 29, 2024
Homeஇந்திய செய்திகள்இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி …!விலை குறைந்த தங்கம் …

இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி …!விலை குறைந்த தங்கம் …

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்தது.

எனினும் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்தது. 29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 12 ரூபாய் குறைந்து இன்று 5700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 96 ரூபாய் வரை குறைந்து 45,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 12 ரூபாய் குறைந்து 5,338 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 96 ரூபாய் குறைந்து 42,704 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 74.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 74, 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments