Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற சம்பவம்!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற சம்பவம்!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக முக்கிய நிறுவனங்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அரச நிறுவனங்களின் பட்டியல் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் இன்று (17) இலங்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்கள் உட்பட 420 அரச நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை திங்கட்கிழமை (14) சமர்ப்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதியளித்ததன் பிரகாரம், அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கீழ் 1283 நிறுவனங்கள் உள்ளதாகவும், அதில் 29 அமைச்சுக்கள் மற்றும் 99 அரச திணைக்களங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

25 மாவட்ட செயலகங்கள், 09 மாகாண சபைகள், 341 பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் 341 உள்ளூராட்சி சபைகள் என நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments