Thursday, April 18, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் வரலாறு காணாத வகையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

இலங்கையில் வரலாறு காணாத வகையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் வரலாறு காணாத உயர்வைப் பதிவு செய்துள்ளது என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் கடந்த சில நாட்களில் 4387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அவர்களில் 32.5 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 20334 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, டெங்கு நோயினால் 145 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நாட்களில் பதிவாகும் காய்ச்சலின் அறிகுறிகளும் டெங்குவின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒத்திருப்பதால், நோயின் நிலையைத் தீர்மானிக்காமல் உட்கொள்ளும் மருந்துகளால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments