Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசைகள்! மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசைகள்! மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் டீசல் மற்றும் பெற்றோல் இரண்டும் இல்லை என இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் டி.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால், பெட்ரோல் நிலையங்கள் அருகே மீண்டும் நீண்ட வரிசை உருவாகியுள்ளது.

முத்துராஜவெல பெற்றோல் முனையத்திலிருந்து பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அடுத்த இரண்டு நாட்களில் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

40,000 மெட்ரிக் தொன் ஆட்டோ டீசல் கப்பல் மாத்திரமே நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 92 ஒக்டேன் பெற்றோல் கப்பலும் எதிர்வரும் 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளது.

இந்த கப்பலில் 33,000 மெட்ரிக் டன் பெட்ரோல் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, நாட்டை வந்தடைந்த 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பலில் இருந்து தரையிறங்கும் நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எவ்வித அனுமதியும் பெறாத மற்றும் வழிகாட்டல்களுக்கு இணங்காத வர்த்தக நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், 2100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அங்கீகரிக்கப்படாத எண்ணெய் டேங்கர்களை வைத்திருப்பதை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

இதேவேளை, தற்போது 1250க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி வணிகங்கள் தங்கள் எரிபொருள் தேவைகளுக்கு அமெரிக்க டாலர்களில் செலுத்த வேண்டும். இந்த வணிகங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோகஸ்தர்களிடமிருந்து எரிபொருளைப் பெறலாம்.

மேலும், வணிக நிறுவனங்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments