Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 10 பேர் கைது!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 10 பேர் கைது!

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்ல முயன்ற 10 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று மேற்கொணட சுற்றிவழைப்பில் அந்நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் பொருளதார சிக்கலினால் ஏணையளவானோர் சொந்த நாட்டினை விட்டு வெளிநாட்டுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கின்றனர்.

இதை தடுக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்கானிப்பினை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதன்போது நேற்றையதினம் சந்தேகத்தின் பேரில் ஒரு படகு இருந்துள்ளது இதனையடுத்து அதை கண்ட கடற்படையினர் அதில் உள்ள பத்து பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின் போது குறித்த நபர்கள் வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றது தெரியவந்துள்ளதையடுத்து அவர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை, உருமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளே ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 02 படகு நடத்துநர்கள், 02 பெண்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 04 பேர் உட்பட 04 ஆண்களும் அடங்குவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தீவிர விசாரணையின் பின் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments