Tuesday, April 23, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையிலுள்ள மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து! வெளியான அதிர்ச்சி தகவல் !

இலங்கையிலுள்ள மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து! வெளியான அதிர்ச்சி தகவல் !

மருத்துவ புள்ளிவிபரங்களின்படி இலங்கையில் அண்மைக்காலமாக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருகின்றது.

செப்டம்பர் சர்வதேச டிமென்ஷியா மாதமாகவும், செப்டம்பர் 21 சர்வதேச டிமென்ஷியா தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மறதி நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் பாரியளவில் அதிகரித்து வருவதாக இலங்கை அல்சைமர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், 2050 ஆம் ஆண்டளவில், இலங்கையில் அரை மில்லியனுக்கும் அதிகமான டிமென்ஷியா நோயாளிகள் இருப்பார்கள் என அல்சைமர் சங்கம் கணித்துள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அல்சைமர் சங்கம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments