Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையர்களை அழைத்து சென்ற கப்பலின் கேட்பன் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையர்களை அழைத்து சென்ற கப்பலின் கேட்பன் தொடர்பில் வெளியான தகவல்!

மியன்மாரிலிருந்து கனடாவிற்கு 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மியான்மர் மீன்பிடிக் கப்பல் லேடி ஆர்3 பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பரப்புகளுக்கு இடையில் விபத்துக்குள்ளானபோது, ​​கப்பலின் தலைவர் காணாமல் போயுள்ளதாக வியட்நாமிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

பின்னர், கப்பலில் இருந்த இலங்கையர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சிங்கப்பூரில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஜப்பானிய கப்பலான ஹீலியோஸ் லீடரைத் தொடர்பு கொண்டது.

அந்த கப்பல் மூலம் இலங்கையர்கள் மீட்கப்பட்டு தெற்கு வியட்நாமில் உள்ள Vung Tau துறைமுகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக இவர்கள் இலங்கையை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

மேலும், அவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இவர்கள் முன்னதாக கடவுச்சீட்டுடன் விமானம் மூலம் மியான்மர் சென்றுள்ளனர்.

303 இலங்கையர்களை ஜப்பான் கப்பல் ஒன்று காப்பாற்றுவதற்கு முன் 40 மணி நேரம் அலைந்து திரிந்ததாக வியட்நாமிய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வியட்நாமின் பா ரியா – வுங் தா மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் மீட்கப்பட்ட இலங்கையர்களை மூன்று கட்டிடங்களில் தங்கவைத்து அவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், 20 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

சர்வதேச புலம்பெயர் அமைப்பு அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இலங்கையில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கையர்களை நாடு கடத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments