Thursday, March 28, 2024
Homeஇலங்கை செய்திகள்இனி நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் அதிரடியாக களமிறங்கும் STF அதிகாரிகள்?

இனி நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் அதிரடியாக களமிறங்கும் STF அதிகாரிகள்?

பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லு.

வடக்கு மற்றும் தென் மாகாணங்களைத் தவிர, குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஏனைய கடமைகளில் இருந்து நீக்கப்பட்டு எதிர்காலத்தில் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக மாத்திரம் பயன்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் வருடாந்தம் 1100 முதல் 2000 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவில் ஹெரோயின் விற்பனை செய்யப்படுவதாகவும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமூகம் மத்தியில் பல்வேறு போதைப்பொருட்களை விநியோகிக்கும் திட்டங்களை கடத்தல்காரர்கள் ஆரம்பித்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments