Saturday, April 20, 2024
Homeவிளையாட்டு''இந்தியாவை சொந்த மண்ணில் ஜெயிப்பது கடினம்.. ஆனால்.. '' - ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ்...

”இந்தியாவை சொந்த மண்ணில் ஜெயிப்பது கடினம்.. ஆனால்.. ” – ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேச்சு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அதன் சொந்த மண்ணில் கைப்பற்றுவது என்பது, ஆஷஸ் தொடரில் வெற்றி பெறுவதைவிட மேலானது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை மறுதினம் தொடங்குகிறது.

கடைசியாக நடந்த 3 டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால், இந்த தொடரில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக, 19 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இந்திய பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ், இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமானது என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை கைப்பற்றுவதற்கு மேலானது என குறிப்பிட்டுள்ள கம்மின்ஸ், ஆனால், அது மிகவும் அரிதானது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணி பலவீனமாக இருப்பதாகவும், 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்றும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சாப்பல் கூறியுள்ளார்.

அவரது கருத்து இந்திய கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வெளியாகும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற பத்திரிக்கைக்கு, கிரேக் சாப்பல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில்,

அவர் கூறியதாவது- இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரரான ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயமடைந்துள்ளனர். இந்திய அணி முழுவதுமாக விராட் கோலியை நம்பியுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அணி மிகவும் பலவீனமாக நிற்பதைப் பார்க்கலாம். ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முழு கவனம் செலுத்த வேண்டும். வேறு எதைப் பற்றியும் நினைக்க கூடாது.

இதைச் செய்தால் இந்திய அணியை வெல்ல முடியும். இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனையும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments