Wednesday, April 24, 2024
Homeஇந்திய செய்திகள்இந்தியாவில் இருந்து 1 பில்லியன் டாலர்களை எட்டிய ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி!

இந்தியாவில் இருந்து 1 பில்லியன் டாலர்களை எட்டிய ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி!

ஐபோன் என்றால் அதற்கென்று தனி வகையான வாடிக்கையாளர்கள் எப்போதும் உண்டு. எப்படியாவது தனது வாழ்நாளில் ஒரு ஆப்பிள் புராடக்ட்டையாவது வாங்கி விட வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு.

இதன் காரணமாக தான் ஐபோன் நிறுவனம் அவ்வப்போது பல விதமான புராடக்ட்களை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது.

அதே போன்று, புது புது அம்சங்களையும் கொண்டு வருகிறது. இந்நிலையில், ஐபோன் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம், இந்தியாவிற்கான மொபைல் போன்களை உற்பத்தி செய்வது மட்டுமின்றி, டிசம்பர் மாத நிலவரப்படி 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது என்று அந்நிறுவனத்தின் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய வணிக சமூகத்துடனான அதிகாரப்பூர்வ ஜி20 உரையாடல் மன்றமான தி பிசினஸ் 20 (B20) நிகழ்வில் பேசுகையில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் அல்கேஷ் குமார் சர்மா,

இந்தியாவை ஒரு சேவை சார்ந்த நாடு என்கிற இடத்தில் இருந்து தயாரிப்பு சார்ந்த நாடாக மாற்றுவதற்கு பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

மேலும், உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் உண்மையில் சந்தையில் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது என்று பேசினார். மேலும், நமது நாட்டின் மொபைல் உற்பத்தி என்பது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது என்றும், இதன் மூலம் பொருளாதாரமும் மேம்படுகிறது என்றும் மாநாட்டில் குறிப்பிட்டு பேசினார். குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் உற்பத்தியை பற்றி குறிப்பிட்டு இருந்தார். இப்போது கிடைத்துள்ள டிசம்பர் புள்ளிவிவரபடி 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொபைல் போன்களை ஏற்றுமதி செய்துள்ளனர் என்று சர்மா கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments