Friday, March 29, 2024
Homeஇந்திய செய்திகள்இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விழா_தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ.

இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விழா_தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ.

இந்தியாவில் அரசியல்சாசனம் அமலுக்கு வந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை காமராஜர் சாலையில் காலை 8 மணிக்கு தமிழக ஆளுநர் என் ஆர் ரவி குடியரசு தினவிழாவில் கொடியேற்றி அவருக்கு கொடுக்கப்பட்ட அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் காலை 10.30 மணிக்கு டெல்லி கடமை பாதையில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ மூவர்ன கொடியை ஏற்றி வைத்தார்.

குடியரசுத் தலைவராக பதவியேற்றபிறகு, முதல்முறையாக அவர் குடியரசு தின விழாவில் கலந்துகொள்கிறார். குடியரசு தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல்-சிசி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.விஜய் சவுக் பகுதியிலிருந்து கடமைப் பாதை வழியாக செங்கோட்டை வரை இந்த அணிவகுப்பு நடைபெறும் எனவும் ராணுவம், கடற்படை, விமானப் படையினர், எகிப்தைச் சேர்ந்த 120 வீரர்கள் கொண்ட குழு என இவையும் சேர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்கள் சார்பிலும், 6 அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மேலும் குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட வருவோருக்கு கியூஆர் குறியீடு அடிப்படையிலான அழைப்பிதழ்கள்களும் ஏற்கனவே வழங்கப்பட்டன.இந்நிலையில் காலை 9.50 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர், முப்படை தளபதிகள், பிதமர் மோடி ஆகியோர் தேசிய போர் நினைவுச்சின்னம் வருகை தந்து மரியதை செலுத்தினர். கடமை பாதையில் உள்ள மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்கள் மரியதை செலுத்தினர். இதையடுத்து வந்த குடியரசு தலைவரையும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல்-சிசியையும் வரவேற்றார் பிரதமர் மோடி.

இதையடுத்து 21 குண்டுகள் முழங்க குடியரசு தின அணிவகுப்பு தொடங்கியது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments