Tuesday, March 19, 2024
Homeஉலக செய்திகள்ஆப்கானுக்கான நிதி உதவியில் தாக்கம் செலுத்தும் பெண்களின் உரிமைகள் மீதான தலிபான்களின் அடக்குமுறை - ஐ.நா.

ஆப்கானுக்கான நிதி உதவியில் தாக்கம் செலுத்தும் பெண்களின் உரிமைகள் மீதான தலிபான்களின் அடக்குமுறை – ஐ.நா.

பெண்களின் உரிமைகள் மீதான தலிபான்களின் அடக்குமுறைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான தலிபான்களின் ஒடுக்குமுறை ஆப்கானிஸ்தானுக்கான உதவி மற்றும் மேம்பாட்டு நிதி வழங்கும் நடவடிக்கையில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு இவ்வருடத்திற்கு வழங்குவதற்காக 4.6 பில்லியன் நிதியுதவி கோரப்பட்டுள்ளதாக அந்நாட்டிற்கான ஐ.நா சபையின் தூதுவர் Roza Otunbayeva தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர் வாழ்வதற்கான உதவிகளை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பெண்களுக்காக உயர் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களில் சேவையாற்றுதல் உள்ளிட்ட விடயங்களுக்கு தலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆண்களின் துணையின்றி பெண்கள் வௌியில் செல்லவும் தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

இவ்வாறான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் மாத்திரமே ஆப்கானிஸ்தானுக்கான உதவிகள் வழங்கப்படுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments