Friday, March 29, 2024
Homeஅரசியல்செய்தி ஆன்லைன் ரம்மி தடை?திமுக எம்பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர்..!! 

 ஆன்லைன் ரம்மி தடை?திமுக எம்பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர்..!! 

ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, அனைத்து மாநிலங்களும் இந்த பிரச்னையை முன்வைத்தால் தேசிய அளவில் தடை செய்ய வாய்ப்புள்ளது என மத்திய அமைச்சர் ஆஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு அரசு சார்பில் விளக்கமும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து திமுக எம்பி தமிழச்சி கேள்வி எழுப்பினார். “ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு கவர்னர் இதுவரை அனுமதி வழங்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை ஆன்லைன் ரம்மியால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?” என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இதுவரை 19 மாநிலங்கள் இதுதொடர்பான மசோதாவை கொண்டுவந்துள்ளன. அனைத்து மாநிலங்களும் முன்வந்தால் தேசிய அளவில் தடை மசோதாவை கொண்டுவருவது குறித்து அரசு ஆலோசிக்கும்” என தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு கவர்னர் மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது குறித்து கருத்து கூற இயலாது என கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments