Friday, March 29, 2024
Homeஉலக செய்திகள்'ஆத்திரமூட்டும்' டாங்கிகள் யுக்ரேனுக்குள் நுழைவது ஏன்?

‘ஆத்திரமூட்டும்’ டாங்கிகள் யுக்ரேனுக்குள் நுழைவது ஏன்?

ரஷ்யா – யுக்ரேன் போர் தொடங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் யுக்ரேனுக்கு ஏப்ரம்ஸ் மற்றும் லெப்பர்ட் டாங்கிகளை அனுப்புவதாக அறிவித்துள்ளன.

31 எம்1 ஏப்ரம்ஸ் போர் டாங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்புவதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை (ஜன. 25) அறிவித்தார். 

14 லெப்பர்ட் 2 பீரங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்புவதாக, ஜெர்மனி அறிவித்த சில மணிநேரங்களில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டது. 

தங்களிடம் உள்ள ஜெர்மனி தயாரிப்பு டாங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்ப மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜெர்மனி அனுமதி அளித்துள்ளது. 

இந்த டாங்கிகளை தங்கள் நாட்டுக்கு அனுப்புமாறு மேற்கு நாடுகளிடம் யுக்ரேன் பல மாதங்களாக கேட்டுவந்தது. 

அமெரிக்கா மற்றும் ஜெர்மனி யுக்ரேனுக்கு அனுப்ப உள்ள எம்1 ஏப்ரம்ஸ் மற்றும் லெப்பர்ட் 2 டாங்கிகளில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? அவை தங்களுக்கு வேண்டும் என யுக்ரேன் ஏன் ஆர்வம் காட்டுகிறது? 

அமெரிக்க தயாரிப்பான எம்1 ஏப்ரம்ஸ் டாங்கிகள், உலகில் உள்ள மிகவும் நவீனமான போர் பீரங்கிகளுள் ஒன்றாகும். மேலும், இதனை இயக்குவதற்கு மிக அதிக பயிற்சி தேவை. 

அமெரிக்காவின் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான இத்தொகுப்பில், டாங்கி நின்றுவிட்டால் அதனை இழுத்துச் செல்வதற்கான எட்டு மீட்பு வாகனங்கள், வெடி மருந்துகள், உபகரணங்கள், பயிற்சி மற்றும் பராமரிப்புக்கான செலவு ஆகியவை அடங்கியுள்ளன. 

ஆனால், போர்க்களத்திற்கு இந்த டாங்கிகள் கொண்டு செல்லப்படுவதற்கு பல மாதங்களாகலாம் எனத் தெரிகிறது. 

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துறை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், தங்களுடைய இருப்பில் ஏப்ரம்ஸ் டாங்கிகள் மீதம் இல்லை என தெரிவித்துள்ளார். எனவே, இந்த டாங்கிகளை தனியார் ஒப்பந்ததாரர்கள் அல்லது வேறு நாட்டிடமிருந்து அமெரிக்கா வாங்கி அனுப்ப வேண்டும். 

எனினும், ஜெர்மன் தயாரிப்பான லெப்பர்ட் 2 டாங்கிகள் ஏற்கெனவே இருப்பில் உள்ள நிலையில், இரண்டு முதல் மூன்று மாதங்களில் யுக்ரேனை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டாங்கிகள் மிகவும் திறன்வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments